">

Wednesday, August 16, 2006

 

Senjippanambakkam ShivaTemple


Senjippanambakkam ShivaTemple (in English):

Enroute Tiruttani from Chennai central, next to Kadambattur lies Senjippanambakkam. Very close to the railway station, a thin lane goes into the village and suddenly from no where, appears a beautiful temple (almost intact) studded between thorny trees and enroached land, a Shiva temple. The hand painted name says as "Kailasanathar temple" but the temple is devoid of Puja.

The deity Shiva linga is lying out in gay abandon and the avudai (the stone encircling the Shiva linga) also lies somewhere outside. The sanctum sanctorum was so dark, that we could not make out the deities, but thanks to Chandru's good flash and digital stuff, we came to know on looking the prints that a Vishnu statue (in seated position) is also seen inside the Shiva temple!!

The architecture is a marvel and seems to have been done by the Hoysala Nayaks, and this temple must easily be one built in 1600-1700 A.D. The Bichadanar and Shiva sculptures are intact and what this temple needs is just retrieving the surrounding land and a regualr puja. A small girl and her mother from the nearby hut are performing the Puja daily to the Linga lying outside. But ironically, a local Hindu Group had come out with a Naga temple,adding a suffix with all names in Hindu lexicon.. "Naga Vinayaka, Naga Murugan,Naga Ayyappan, Naga Navagraha, Naga Agasthya, Naga Amman.. and so on.." and have managed to build a cinema -setting like Man-Made Snake Mound into which these so called Naga Gods are seen! The temple attracts good crowd and the family which handles that temple is minting money. Sad, a plight, the Shiva temple is ignored. The local councillor could not be contacted as the time we went was election time. Repeated calls ended futileand our team hopes that one day we will again go to the village and try to mobilize local support for this temple to regain its lost glory soon!!

In Tamil:

சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் ரயில் மார்க்கத்தில், கடம்பத்தூருக்கு அடுத்து (திருவள்ளூர்ருக்கு அடுத்து மூன்றாவது நிறுத்தத்திலுள்ளது செஞ்சிப்பணம்பாக்கம்! ரயில் நிலையத்திலிருந்து தடுக்கி விழுந்தால், நேராய் ஒரு பெரிய முட்புதர்கள் நிறைந்த பெரிய நிலப்பரப்பு வரும். அதில் திடீரென முளைத்தார்போல், கண்ணில் படுவது, அழகான கோபுரம் கொண்ட சிவாலயம். ஆனால், அதன் சிவலிங்கங்களில் இரண்டிலொன்று வெட்டவெளியில் நெட்டுகுத்தலாய் ஆவுடையின்றி ஆகாய பூசை (வேரென்ன, மழை பெய்தால் அபிஷேகம், காற்றடித்தால், எதேனும் இலைகள், பூக்கள் விழுந்தால் அர்ச்சனையென கிடக்கிறது!

நுழைவாயிலில், இந்து அறநிலையத்துறையினர் எதோ பூசைக்கான கட்டணம் எழுதியதுபோலுள்ளது. அங்கும், ஒரு மொட்டை ஆவுடை கிடக்கிறது; உள்ளே அதிசயமாக, சிவலிங்கத்துடன், ஒரு பெருமாளின் சிலையும் காணப் பெற்றோம்!

ஆனால், அதுவும் காமிராவின் வெளிச்சத்தில்! அத்தனை இருட்டு! கோபுரம், மிக நேர்த்தியாக உள்ளது. நாயக்கர் காலத்து கோபுரம் (1600-1700 கி.பி) அழகிய பிச்சாடனர், தக்ஷிணாமுர்த்தி சுதை சிலைகள் நிறைந்த கோபுரம்; நடுநடுவே முட்செடிகள், உடைக்க முற்படும் ஆலஞ்செடிகள்! சுற்றிலும் ஆக்ரமிப்பு! இதுதான் செஞ்சிப்பணம்பாக்கம் சிவன் கோயில்! மிக அருகிலேயே, சீரியல் சினிமா தோற்கும் அளவுக்கு ஒரு பெரிய செயற்கை பாம்புப்புற்றினைச் செய்து( கிட்டத்தட்ட 30 அடி உயரம்!) அதில் பல நுழைவு வாயில்கள் வைத்து, எங்கு காணினும், நாகவிநாயகர், நாகஐயப்பன், நாகஅம்மன் என்று எல்லாக் கடவுள்கள் பெயரிலும் நாகத்தை சேர்த்துக் கொண்டு, ஒரு சூப்பர் செட்-அப் அமோகமாக கடவுள்கள் பெயரில் விற்பனை ஆகிக்கொண்டிருக்க, இந்த காலச்சின்னமான சிவன் கோயில் கேட்பாரற்று காலச்சின்னாபின்னமாகக் காத்திருக்கிறது! நாம் போன நேரம் தேர்தல் நேரம் என்பதால் அப்போது ஊர் தலைவர் யாரிடமும் பேச முடியவில்லை. எனவே, மீண்டும் உழவாரப் பணி செய்ய செப்டம்பர் மாதம் படையெடுக்கத்திட்டம்!

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Click here to join temple_cleaners
Click to join temple_cleaners